'நீட்' தேர்வை அகற்ற என்ன வழி? கள் இயக்கம் நல்லசாமி அதிரடி யோசனை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி.
இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும், வாழை உள்ளிட்ட எந்தவொரு விளை பொருளுக்கும் நல்ல விலையில்லை. வெளிநாடுகளில் இருந்து, 70 சதவீதம் எண்ணெய், 60 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு, மானியம் வழங்குவதன் மூலம், நம் நாட்டு விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது.
எனவே, நமது நாட்டில், எண்ணெய் வித்து மற்றும் பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு, மானியம் தர வேண்டும்; அவற்றை ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும். இறக்குமதி கொள்கையை மாற்றாத வரை, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராது. அரசு, நெல் கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் கொடுக்காமல் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் அதிகரித்துவிட்டதால்தான், நோய் பெருகுகிறது. கலப்படம் இல்லாத உணவு பொருட்களை சந்தைக்கு கொண்டு வரும்போது, நோய் பரவல் குறையும்; அதன் மூலம், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் அவசியமும் குறையும். இதன் மூலம், 'நீட்' தேர்வு அவசியமில்லாத ஒன்றாகிவிடும். 'நீட்' தேர்வை அகற்ற, இதுமட்டுமே வழி. இவ்வாறு, நல்லசாமி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu