‘எம்.பி. தேர்தலில் 15 தொகுதி வேண்டும்’ காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

‘எம்.பி. தேர்தலில் 15 தொகுதி வேண்டும்’ காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசினார்.

எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு 10 முதல் 15 தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தி.மு.க .கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி கேட்டு பெற வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமையிடம் 10 முதல் 15 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று பேசினார்கள். கடந்த காலங்களில் இது போல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். மாவட்ட தலைவர்களின் இந்த கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கே. எஸ். அழகிரி தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இனிமேலாவது அவர் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் மாநில தலைவர்களான தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் போன்றவர்களுக்கு இந்த கூட்டத்தில் அழைப்பு விடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில் சென்னையில் நடந்திருப்பது மாவட்ட தலைவர்கள் கூட்டம் அல்ல .அது ஒரு மர்ம கூட்டம் போல உள்ளது. எங்களைப் போன்ற முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. கேட்டால் முன்னாள் தலைவர்கள் முடிந்து போன தலைவர்கள் என கூறுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

Tags

Next Story