மேலும் சிக்கலாகும் காவிரி பிரச்சினை: தமிழகத்திற்கு எதிராக கைகோர்க்கும் பாஜக

மேலும் சிக்கலாகும் காவிரி பிரச்சினை: தமிழகத்திற்கு எதிராக கைகோர்க்கும் பாஜக

மத்திய மந்திரி குமாரசாமி கவுடா.

More complicated Cauvery issue: BJP joins hands against Tamil Nadu

காவிரி நீர் பிரச்சினை மேலும் சிக்கலாகி வருகிறது. தமிழகத்திற்கு எதிராக பாஜக மற்றும் ஜே. டி எஸ். கட்சிகள் கர்நாடகாவில் கைகோர்த்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி நீர் பிரச்சனை என்பது 75 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது. தமிழகம் -கர்நாடகா இடையே உள்ள இந்த பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு எத்தனை டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவிட்டாலும் அணைகளில் நீர் இருப்பு இல்லை என்ற காரணத்தைக் காட்டி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது இல்லை.

பருவமழை காலங்களில் மட்டும் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பினால் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறது. இப்படி திறந்து விடும் தண்ணீர்தான் தமிழகத்திற்கு வருகிறது. மற்றபடி காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் கண்காணிப்பு ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா மதிப்பதில்லை. இது ஆண்டாண்டு காலம் தொடரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் மழை பெய்து உள்ளதால் அணைகள் நிரம்பியதால் 2 லட்சம் கனஅடி அளவிற்கு காவிரியில் தண்ணீர் வந்துள்ளது இது எத்தனை நாள் நீடிக்கும் என தெரியாது.

இது ஒரு புறம் இருக்க மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கர்நாடகாவில் நிலைமை ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராக மாறி உள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் மத்தியில் தற்போது பாரதிய ஜனதாவும், கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எனப்படும் மத சார்பற்ற ஜனாதனம் உள்ளது.

இந்த இரு கட்சிகளும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். முதல்வர் சித்தராமையா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி 10 நாள் பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார்கள். இந்த பாதயாத்திரை காங்கிரஸ் அரசுக்கு எதிரானது மட்டுமல்ல தமிழகத்திற்கும் எதிரானது தான்.

பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசிய மத்திய மந்திரி குமாரசாமி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசியதை விட தமிழகத்திற்கு எதிராக அதாவது காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவது பற்றி தான் அதிகம் பேசி இருக்கிறார். இதன் காரணமாக அங்குள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் விஜயேந்திராவும் குமாரசாமியும் கூட்டணி சேர்ந்து கைகோர்த்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இதை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா விமர்சனம் செய்து உள்ளார். அவர் பேசுகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நீண்ட நாள் நீடிக்காது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கிருஷ்ணராக விஜயேந்திராவும் (கர்நாடக மாநில பாஜக தலைவர்) அர்ஜுனனாக குமாரசாமியும் சேர்ந்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஆக மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு அவர்கள் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதை பார்த்தால் தமிழகத்திற்கு தமிழகத்திற்கு எதிராக கைகோர்த்து உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Tags

Next Story