‘மோடியின் ரோடு ஷோ தமிழகத்தில் பிளாப் ஷோ’ முதல்வர் ஸ்டாலின் வர்ணனை

தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் மோடியின் ரோடு ஷோ பிளாப் ஷோ என முதல்வர் ஸ்டாலின் வர்ணனை செய்து உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் கோடை வேலையும் மிஞ்சுவதாக உள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தனது கட்சி சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் என்ற இடத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றி விடுவார்கள். ஒரு தாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளை தூவி இந்தியாவை நாசம் செய்து விடுவார்கள். சமூகநீதியை குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.
இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி தேர்தல் வந்துவிட்டதால் உள்நாட்டிற்கும் டூர் அடிக்கிறார் அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. அவரே ரோடு ஷோ காட்டுகிறேன் என்று தான் சொல்லியிருக்கிறார் .நேற்று சென்னையில் தியாகராயர் நகரில் ஷோ காட்டினார். பிரதமர் அவர்களே அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
நீதி கட்சி தலைவர் தியாகராயர், சௌந்தரபாண்டியனார் பேரில் இருக்கும் பாண்டி பஜார் பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்றும் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா உங்கள் ஷோ பிளாப் ஷோ ஆன உடனே சமூக வலைத்தளங்களில் சென்னை வந்ததை பற்றி எழுதிய போது சொல்லுகிறார், சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப் போகிறாராம்.
மோடி அவர்களே அந்த திட்டத்திற்கு தடையாக இருப்பதை நீங்கள் தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளிக்காததால் தான் நிதி கிடைக்கவில்லை. அதனால் தான் திட்ட பணியில் தாமதம் ஆகிறது. கடந்த 2020 ல் ஒன்றிய உள்துறை மந்திரி இந்த திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன் பிரதமரை நேரில் சந்தித்தும் பயனில்லை. ஆதலால் மோடி போடும் ரோடு ஷோ தமிழ்நாட்டில் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu