தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றார்
X
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமித்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை அமைத்தார்.

அதன் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய சட்டம் அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது . இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்தார்.

அத்துடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு துணைத் தலைவராக அமைச்சர் மஸ்தான், ஏ.பி. தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், யு. சுதிர் லோதா. பைரேலால் ஜெயின். டாக்டர் எல். டான் பாஸ்கோ. அருட்சகோதரர் டாக்டர் எம் இருதயம். பிக்கு மௌரியார் புத்தா உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநில சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் மஸ்தான் உறுப்பினர்கள் 6 பேர் உள்ளிட்ட அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!