தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
X
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பு : தமிழக அரசு அனுப்பி வைத்த கோப்புகளில் கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநரை கையெழுத்து போட அழுத்தம் கொடுப்பதற்காகவே இரண்டு அமைச்சர்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இச்சந்திப்பில், நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்து அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்ததாகவும் இருவரையும் முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார் என

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.முன்னதாக, தேநீர் விருந்தை சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் மமக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!