முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை ஏற்பவர்களோடு தான் கூட்டணி- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை ஏற்பவர்களோடு தான் கூட்டணி- அமைச்சர் ஜெயக்குமார்
X

வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் பிரச்சாரம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. அதற்கான பொதுக்கூட்ட அரங்கு அமைக்கும் பணியை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமையாக இருக்கும் என்றார்.

எம்ஜிஆர் நல்லாட்சி செய்யவில்லை எனச் சீமான் பேசியது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, வரலாறு தெரியாமல் சீமான் பேசுவதாகவும், புரட்சித் தலைவரைத் தொட்டால் கெட்டான் என்ற அவர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம் என்றார்.

Tags

Next Story
ai healthcare products