மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்
X
லேசான நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

லேசான நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

தமிழக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தபோது, அவரது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

விசாவில் உள்ள பாஸ்போர்ட் எண்ணை மாற்றிய பிறகு அமைச்சர் துரைமுருகன் மாலை 6.50 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்ல இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினார்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.




Next Story
ai solutions for small business