மல்லிகார்ஜுன் கார்கே டம்மி: காங்கிரசில் தொடரும் சோனியா காந்தியின் ஆதிக்கம்

மல்லிகார்ஜுன் கார்கே டம்மி: காங்கிரசில் தொடரும் சோனியா காந்தியின் ஆதிக்கம்
X

மல்லிகார்ஜுன் கார்கே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டம்மியாக தான் கருதப்படுகிறார். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் ஆதிக்கம் தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஒரு டம்மி தலைவராக கருதப்படுகிறார். காங்கிரஸில் சோனியா காந்தியின் ஆதிக்கம் மீண்டும் தொடர்வதை தான் கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டது தெளிவாக்கியுள்ளது.

கடல் அலையையும், ஆற்று மணலையும் கூட அள்ளிவிடலாம் ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள போஷ்டி பூசலை எண்ண முடியாது என்பது காங்கிரஸ் கட்சி பற்றி மற்ற கட்சிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் அடிக்கடி பதிவிடும் ஒரு சில விமர்சனங்கள் ஆகும்.இந்த விமர்சனங்கள், இந்த பதிவுகள் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது. அங்கு முதலமைச்சர் பதவி தனக்கு தான் வேண்டும் என மூத்த தலைவர் சித்த ராமையாவும்,டி.கே சிவகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு டெல்லிக்கு படை எடுத்தது அகில இந்திய அளவில் கடந்த சில நாட்களில் மிகப்பெரிய அரசியல் செய்திகளாகவே கருதப்பட்டது.

இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களிடம் முதலில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் எவ்வளவோ வந்து பேசி பார்த்தும் முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அகில இந்திய தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜுன் கார்கே. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரும் இருவரையும் சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் முடியவில்லை. ராகுல் காந்தி எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக இந்த பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. சோனியா முன் நிறுத்தப்பட்ட இருவரும் அவர் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சித்தாராமையா முதலமைச்சர் டி கே சிவகுமார் துணை முதல்வர் என்ற ஒரு மனநிலையை ஏற்றுக்கொண்டு சொந்தமாநிலத்திற்கு திரும்பினார்கள். அவர்களது பதவி ஏற்பு விழாவும் முடிந்துவிட்டது.

ஆக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் வலுவான தலைவராக, ஆதிக்கம் உள்ள தலைவராக கருதப்படுபவர் சோனியா காந்தி தான். அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்பட்டாலும் இன்று வரை முக்கிய முடிவுகளை எடுப்பது அவராகத்தான் உள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் இந்திய பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி தான் முக்கிய முடிவுகளை எடுத்தார். சோனியா காந்தியின் குடும்பம் எடுத்த முடிவுகளை செயல்படுத்திய ஒரு ரிமோட் பொம்மை போல்தான் மன்மோகன் சிங் செயல்பட்டு வந்தார்.

இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட இதனை விமர்சனம் செய்தார்கள். இந்த ஒரு கருத்தை மக்கள் மனதில் மாற்ற வேண்டுமட் என்பதற்காகவே தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ராகுல் காந்தி ஒதுங்கிக் கொண்டார். சோனியா காந்தியும் தேர்தலில் தனது மூக்கை நுழைக்கவில்லை பல ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் அவர் ஒரு டம்மி தலைவராக தான் கருதப்படுகிறார் என்பது இப்போது மீண்டும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது .இந்தசூழலில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சோனியா காந்தியின் குடும்ப ஆதிக்கம் தான் மீண்டும் தொடரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil