அரிசிக்கும் ஜிஎஸ்டி: மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளன.
அரிசிக்கு 5% ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு 3 முதல் 5 வரை ரூபாய் வரை விலை அதிகரிக்கக்கூடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அரிசி ஆலைகள் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது . இதேபோல, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவர். எல்லாவற்றுக்குமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டுமென்ற மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்களின் கடும் கோபத்திலிருந்து தப்ப முடியாது. எனவே, உடனடியாக புதிய வரி விதிப்புகளை திரும்பப் பெறுவது அவசியம்"என்று கூறியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu