காங்கிரஸ் vs பாஜக... இதுவரை நடந்த தேர்தல்களில் எத்தனை தொகுதிகளில் வெற்றி?

காங்கிரஸ் vs பாஜக... இதுவரை நடந்த தேர்தல்களில் எத்தனை தொகுதிகளில் வெற்றி?
X
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 294 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 229 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 290 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 4ம் தேதி இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்தி மாநில கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.

1951ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலின்போது காங்கிரஸ் 364 தொகுதிகளை வென்றது. இந்தியா சுதந்திரமடைந்தபோது முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 371 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் 1962ல் 361 இடங்களைப் பெற்றது காங்கிரஸ். அடுத்ததாக காங்கிரஸ் 1967 தேர்தலில் பல இடங்களை இழந்தது. மொத்தம் 283 இடங்களைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.

1984ல் இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 415 இடங்களைப் பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி இதுதான். இன்று வரை இந்த சாதனை தகர்க்கப்படவில்லை. கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்றதே அந்த கட்சியின் அதிகபட்ச இடங்களாகும்.

பாஜக கடந்த 2019, 2014 ஆகிய தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. முன்னதாக வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. 1984 முதல் தேர்தல்களில் பங்கேற்று வந்த பாஜக, அந்த தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. அடுத்ததாக நடந்த 1989ம் ஆண்டில் 85 இடங்களையும், 1991ம் ஆண்டு 120 இடங்களையும், 1996ம் ஆண்டில் 161 இடங்களையும் வென்று காட்டியது பாஜக. கடந்த 2004 தேர்தலில் 138 இடங்களைப் பெற்றிருந்தது. 2009ல் 116 இடங்களையும், 2014ல் 282 இடங்களையும் பெற்றது.

காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை

  • 1952 - 364 தொகுதிகள்
  • 1957 - 371 தொகுதிகள்
  • 1962 - 361 தொகுதிகள்
  • 1967 - 283 தொகுதிகள்
  • 1971 - 352 தொகுதிகள்
  • 1977 - 154 தொகுதிகள்
  • 1980 - 353 தொகுதிகள்
  • 1984 - 415 தொகுதிகள்
  • 1989 - 197 தொகுதிகள்
  • 1991 - 232 தொகுதிகள்
  • 1996 - 140 தொகுதிகள்
  • 1998 - 141 தொகுதிகள்
  • 1999 - 114 தொகுதிகள்
  • 2004 - 145 தொகுதிகள்
  • 2009 - 206 தொகுதிகள்
  • 2014 - 44 தொகுதிகள்
  • 2019 - 52 தொகுதிகள்

பாஜக இதுவரை ஆண்டு வாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை

  • 1984 - 2 தொகுதிகள்
  • 1989 - 85 தொகுதிகள்
  • 1991 - 120 தொகுதிகள்
  • 1996 - 161 தொகுதிகள்
  • 1998 - 182 தொகுதிகள்
  • 1999 - 182 தொகுதிகள்
  • 2004 - 138 தொகுதிகள்
  • 2009 - 116 தொகுதிகள்
  • 2014 - 282 தொகுதிகள்
  • 2019 - 303 தொகுதிகள்

Tags

Next Story
Benefits Of Drinking Water Before Bed In Tamil