டிவில சொல்றத விடுங்க.. அதிகாரப்பூர்வ அப்டேட் இதுதான்..! ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதி!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 290 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 4ம் தேதி இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்தி மாநில கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.
ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு எண் போட்டு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அதிகாரப்பூர்வ அப்டேட் என்பது தேர்தல் ஆணைய வெப்சைட்டில் கிடைப்பதுதான். நாம் இப்போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதைக் காண்போம்.
- பாஜக - 234 இடங்களில் முன்னிலை
- காங்கிரஸ் - 99 இடங்களில் முன்னிலை
- சமாஜ்வாடி - 35 இடங்களில் முன்னிலை
- திரிணாமூல் காங்கிரஸ் - 31 இடங்களில் முன்னிலை
- திமுக - 21 இடங்களில் முன்னிலை
- தெலுங்கு தேசம் - 16 இடங்களில் முன்னிலை
- ஐஜத - 14 இடங்களில் முன்னிலை
- சிவசேனா (உத்தவ்) - 11 இடங்களில் முன்னிலை
- தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) - 8 இடங்களில் முன்னிலை
- ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 5 இடங்களில் முன்னிலை
- லோக் ஜனசக்தி கட்சி - 5 இடங்களில் முன்னிலை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் முன்னிலை
- சிவசேனா - எஸ்ஹெச்எஸ் - 5 இடங்களில் முன்னிலை
- யுவஜனா ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி - 4 இடங்களில் முன்னிலை
- இந்திய கம்யூனிஸ்ட் - 3 இடங்களில் முன்னிலை
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 இடங்களில் முன்னிலை
- ஆம் ஆத்மி - 3 இடங்களில் முன்னிலை
- ஜனசேனா - 2
- லெனின் மார்க்சிஸ்ட் - 2
- மதசார்பற்ற ஜனதா தளம் - 2
- பிஜேடி - 2
- விசிக - 2
- ராஷ்ட்ரிய லோக் தளம் - 2
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 2
- ஜம்மு காஷ்மீர் தேசிய கட்சி - 2
- மதிமுக - 1
- தேமுதிக - 1
- பாமக - 1
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu