பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?
X
By - C.Vaidyanathan, Sub Editor |14 April 2024 9:19 PM IST
மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா'-வில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களைக் காணலாம்.
2024 நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை "சங்கல்ப் பத்ரா" பிரதமர் மோடி வெளியிட்டார்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா' -வில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுதிமொழிகள் பின்வருமாறு:-
- 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை அமல்படுத்தப்படும்
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
- 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை
- 3 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்குவத்து தான் இலக்கு
- 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாகக் கொண்டாடப்படும்
- 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைய ஏற்பாடு
- 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாகக் கொண்டாடப்படும்
- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு
- 80% தள்ளுபடி விலையில் மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை
- முத்ரா யோஜனா கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்
- தமிழ் மொழியை கௌரவிக்கும் விதமாக திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்
- வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்
- தமிழ்மொழி வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும்
- இந்தியாவின் கவுரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்
- மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகளும் இணைக்கப்படுவர்
- இந்தியர்கள் நிலவில் காலடி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்
- நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நிரந்த அடையாள எண் வழங்கப்படும்
- செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்
இளைஞர்களுக்கான வாக்குறுதிகள்:
- போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க புதிய சட்டம் அமல்.
- வெளிப்படையான பொதுத் தேர்வு
- இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்க ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு விரிவாக்கம்.
- உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது.
- உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம்.
- சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல்.
மற்ற வாக்குறுதிகள்
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சி.
- நாட்டின் எல்லைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு.
- இந்தியாவின் இணையப் பாதுகாப்பை அதிகரிப்பது.
- அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
- சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம்.
- மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம்.
- நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம்.
- இந்தியாவை மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்துவது.
- அனைத்து நாடுகளிலும் பகவான் ராமரின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய ரீதியில் ஒரு திட்டம் தொடக்கம்.
- அயோத்தியின் முழுமையான வளர்ச்சிக்கு உத்தரவாதம்.
- மத மற்றும் கலாச்சார தளங்களை மேம்படுத்துதல்.
- இந்திய திருமணங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘வெட் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்படும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu