அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. இதில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழக கட்சிக்கு 2 இடங்களும் அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 33 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. நேற்று 16 இடங்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று 17 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
வேலூர் - பசுபதி
திருப்பூர் - அருணாச்சலம்
நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
தருமபுரி - அசோகன்
புதுச்சேரி - தமிழ் வேந்தன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - சேகர்தாஸ்
பொள்ளாச்சி - கார்த்திகேயன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசுலியான் நசரேத்
இதன்மூலம் திமுக மற்றும் அதிமுக நேரடியாக 18 தொகுதிகளில் மோதுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றபின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அதிமுகவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் மக்களவை தேர்தலில் அதிமுகவில் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu