சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
முதுபெரும் தமிழறிஞரும், முன்னாள் முதல்வரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியின் சிலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையாந்து, 1.07 கோடி மதிப்பீட்டில், 16 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தார். சிலையின் பீடத்தில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" ஆகிய ஐந்து வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu