வியக்க வைக்கும் கனிமொழி..! எத்தனை ஓட்டு வித்தியாசம்னு பாருங்க..!
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலை வகிக்கிறார். அவர்தான் எப்படியும் வெற்றி பெறுவார் என்பது உறுதியான ஒன்றுதான். அவர் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் என்பதுதான் பலரும் ஆச்சர்யப்படும் ஒரு விசயமாக இருக்கிறது.
ஏற்கனவே தூத்துக்குடி எம்பியாக இருக்கும் கனிமொழி கருணாநிதி, தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறையும் மிகப்பெரிய அளவு வித்தியாசத்தில் வென்ற அவருக்கு தூத்துக்குடி தொகுதி மக்கள் மீண்டும் அளப்பரிய அன்பை கொடுத்துள்ளனர்.
இந்த தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிட அவருடன் அதிமுகவின் சிவசாமி வேலுமணி, பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இங்கு களத்தில் மிகப் பெரிய வேலை பார்த்துள்ளனர். அதனால் கனிமொழியின் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டதுதான்.
தூத்துக்குடியில் நான்கு முனை போட்டி நிலவினாலும் முதல் இடம் என்பது கனிமொழிக்குதான் என்பது உறுதி செய்யப்பட்டதுதான். அதேநேரம் இரண்டாவது இடத்தைப் பிடிக்க தமாகா, அதிமுக, நாதக இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். நாதக மற்றும் தமாகா வேட்பாளர்கள் மாறி மாறி 3வது மற்றும் 4வது இடத்தைப் பெற்று வருகின்றனர்.
10.30 மணி நிலவரப்படி, முதலிடத்தில் இருக்கும் கனிமொழி கருணாநிதி முன்னிலை வகித்தார். அதிமுக சிவசாமி இரண்டாவது இடத்தையும், தமாகா விஜயசீலன் 3வது இடத்தையும் பிடித்திருந்தனர்.
11 மணி நிலவரப்படி கனிமொழி 21,959 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 30, 334 வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாவது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் 8375 வாக்குகளையும், மூன்றாவது இடத்தில் தமாகா 5271 வாக்குகளையும் பெற்றிருந்தனர். நாதக வேட்பாளர் 4446 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
11.30 மணி அளவில் திமுக 55467 வாக்குகளையும் அதிமுக 14249 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
12.30 மணியளவில் கிடைத்த தகவலின்படி, கனிமொழி கருணாநிதி 1,76,980 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர்கள் சிவசாமி வேலுமணி 52,929 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் 41,882 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu