டுவிட்டரில் சாம்பல் நிற டிக் பெற்ற தமிழக முதல் அரசியல் தலைவரான கனிமொழி

டுவிட்டரில் சாம்பல் நிற டிக் பெற்ற தமிழக முதல் அரசியல் தலைவரான கனிமொழி
X

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் டுவிட்டர் பக்கம்.

சமூக வலைதளமான டுவிட்டரில் க்ரே டிக் (Grey Tick) பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமைய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பெற்றுள்ளார்.

பத்திரிகை மற்றும் வானோலி வாயிலாக தொண்டர்களிடம் பேசி வந்த அரசியல் கட்சி தலைவர்கள் தொலைக்காட்சி வந்த பிறகு அதில் தோன்றி பேசினர். கடந்த காலங்களில் இவை வியப்போடு பார்க்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்கள் வந்த பிறகு அதில் கணக்கு வைத்திருப்பதை கட்டாயமாக்கி கொண்டுள்ளனர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை சுருக்கமாக பதிவு செய்வதை சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், உலக அளவில் கவனிக்கப்படக் கூடிய சமூக வலைதளமாக டுவிட்டர் இருந்து வருகிறது.

டுவிட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் சொந்த டுவிட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்து இருக்கும்.

சமீபத்தில் டுவிட்டர் நிறுவனம் அந்த முறையை மாற்றி நீலம் நிறம் சரிபார்க்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் (Grey Tick) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதியின் டுவிட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை டுவிட்டர் நிறுவனம் தற்போது வழங்கி உள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு மற்றும் பன்னாட்டு அரசின் நிறுவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநிதி பதிவாகி உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்