/* */

கே ஆர் கௌரி அம்மா காலமானார்

ஜனாதிபத்திய சம்ரக்ஷன சமிதியின் நிறுவன தலைவர்

HIGHLIGHTS

கே ஆர் கௌரி அம்மா காலமானார்
X

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் ஜனாதிபத்திய சம்ரக்ஷன சமிதியின் நிறுவன தலைவருமான கே ஆர் கௌரி அம்மா இன்று காலை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 102 வயதாகிறது.

1919ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஆலப்புழாவின் பத்தனக்காடு கிராமத்தில் கே.ஏ. ராமன் - பார்வதி அம்மா தம்பதிக்கு 7வது மகளாகப் பிறந்த கவுரி அம்மாள், இளநிலைப் பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுரி அம்மாளை, சமீபத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

13 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 1957 முதல் அருர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1957 இல் தான் கேரள மாநிலத்தில் முதல் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தது. உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். அவர் 1957 முதல் 1959 வரை வருவாய், கலால் மற்றும் தேவஸ்வம் அமைச்சராக இருந்துள்ளார். தொடர்ந்து வருவாய் மற்றும் சிவில் சப்ளை அமைச்சராகரகவும் இருந்துள்ளார்.

மார்ச் 1967 முதல் அக்டோபர் 1969 வரை விற்பனை வரி, கலால் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அவர் 1980 ஜனவரி முதல் 1981 அக்டோபர் வரை விவசாய மற்றும் சமூக நல அமைச்சர் மார்ச் 1987 முதல் ஜூன் 1991 வரை கைத்தொழில் மற்றும் சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் நீதி நிர்வாகத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கவுரி அம்மாள் 1957 ஆம் ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது புரட்சிகர நில சீர்திருத்த மசோதாவை கொண்டுவந்தது மாநிலத்தில் நில உரிமை உரிமைகளை கடுமையாக மாற்றியமைத்தது.சுமார் 16 ஆண்டுகள், 6 பல்வேறு ஆட்சியர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

கவுரி அம்மாள் 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அவரது அரசியல் வாழ்க்கை கட்சியுடன் வளர்ந்தது. கவுரி அம்மாள் தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் இயக்கங்களில் பங்கேற்று பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றுள்ளார். 1964 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு அவர் சிபிஐ (எம்) கட்சியில் இருந்தார்.அதே நேரத்தில் அவரது கணவரும் மூத்த தலைவருமான டி.வி தாமஸ் சிபிஐக்கு ஆதரவளித்தார்.

1994 ல், சிபிஐ (எம்) 'கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை வெளியேற்றியது. பின்னர் அவர் தனது சொந்த அரசியல் அமைப்பை ஆலப்புழாவை தளமாகக் கொண்ட ஜனாதிபதிய சமரக்சனா சமிதி என்ற பெயரில் தொடங்கினார். உடல்நலக் குறைவு காரணமாக 2021 ஆம் ஆண்டில் அவர் அதன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகித்த கவுரி அம்மாள் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கு உரியவர்.வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.

Updated On: 11 May 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?