அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதாவது 2014ம் ஆண்டு போக்குவரத்து வரத்து அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக கூறி மத்திய அமலாக்க துறை போலீசார் கடந்த ஜூன்மாதம் 13ந்தேதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோனையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இலாகா இல்லாத அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்ததாவும், அவரது கைது பற்றி தனக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என கூறி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது மேகலா தரப்பிலும், அமலாக்க துறை சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி தங்களது வாதத்தை வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!