/* */

"அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே" -ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி.

HIGHLIGHTS

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே -ஜெயக்குமார் பேட்டி
X

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், வரும் 14-ம் தேதி, 12 மணியளவில் தலைமை அலுவலகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கழகத்தின் சார்பில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, இக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும். எனவே, இக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் மனு அளிக்கப்படும். கொரோனா காலத்தில் முழுமையாக விதிகளை பின்பற்றி கூட்டம் நடத்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி: நெல்லையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே பிரச்சினை இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதே?

டி.ஜெயக்குமார்: கட்சி கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கபடும். ராணுவக் கட்டுப்பாட்டுடன் கழகம் செயல்படுகிறது. எந்த பிரச்சினையும் கட்சியில் இல்லை. திமுக போன்ற எதிரிகள் நம்மை குறித்து பேசுவதற்கு நாம் இடம் தரக்கூடாது என்பதே கழத்தினரின் எண்ணமாக இருக்க வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே கழகத்தினரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

கேள்வி:அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவதுபோல் ஆடியோ வெளியாகியுள்ளதே?

டி.ஜெயக்குமார்: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் பேசியவர் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியுடன் செயல்படுகிறது. இதே நிலைதான் தொடரும்.

கேள்வி: அதிமுகவுக்குப் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெறுமா?

டி.ஜெயக்குமார்: 100 சதவீதம் இல்லை. நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மாதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர். நாங்கள்தான் அதிமுக என உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இரட்டை இலை எங்களிடம்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றமே சான்றிதழ் கொடுத்துவிட்டது.

கேள்வி: இரட்டைத் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?

டி.ஜெயக்குமார்: தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொண்டதால்தான் எங்களுக்கும் திமுகவுக்கும் 3 சதவீததான் வாக்கு வித்தியாசம் வந்தது. அப்படியென்றால், எல்லோரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

கேள்வி: தமிழகத்திற்குத் தடுப்பூசியை அதிகரிக்கக் கோரி பிரதமரை அதிமுக வலியுறுத்துமா?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசி இல்லை. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாகக் கூறுகின்றனர். ஆனால், எங்கு போட்டிருக்கின்றனர்?

39 எம்.பி.க்கள் எதற்கு வைத்திருக்கின்றனர்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்காமல் வெறுமனே கடிதம் எழுதுகின்றனர். கொரோனா குறைந்துவிட்டது என்கின்றனர். ஆனால், பரிசோதனை செய்தால்தானே கொரோனா தொற்று இருப்பது தெரியும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Updated On: 9 Jun 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்