சசிகலா குறித்த பேச்சால் ஓபிஎஸ் மீது நடவடிக்கை? பதிலடி தந்த ஜெயக்குமார்
ஜெயக்குமார்
இது குறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
சசிகலாவோ அல்லது, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அதிமுகவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். அதை தெளிவுபுடுத்தி ஒரு தீர்மானமே கொண்டு வந்திருந்தோம். அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிககள் கையொப்பமிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு காலத்தில், தர்மயுத்தம் நடத்தி ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அப்போது அவர் வைத்த முதல் கோரிக்கையே, எக்காரணம் கொண்டும், சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது; அபடியென்றால் மட்டுமே, அதிமுகவில் இணைவோம் என்றார்.
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியதே சசிகலாவை எதிர்த்துதான். அதை நினைவுபடுத்துவது எனது கடமை. எல்லாவற்றிற்கும் உடன்பட்டுதான் வந்தார்கள். அதைத்தான் நான் சொல்ல முடியும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்க, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இன்று மதுரையில் பேட்டி அளித்த, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி கட்சி தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். இது அதிமுகவில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது .
இச்சூழலில், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்ற கட்சியின் விதியை சுட்டிக்காட்டி ஜெயக்குமார் பேசியிருப்பதன் மூலம், ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மறைமுகமாக ஜெயக்குமார் எச்சரிக்கிறாரோ என்று, அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu