‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது அவமானம்’: டாக்டர் கிருஷ்ணசாமி

‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது அவமானம்’: டாக்டர் கிருஷ்ணசாமி
X

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது அவமானம்’ என டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் தொடர்வது தமிழகத்திற்கு அவமானம் என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டாஸ் மாக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. இதில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் வேறு வழக்கில் அமலாக்கதுறை நடவடிக்கையில் உள்ளார்.

பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பது சரி அல்ல எனவே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆளுனருக்கு மனு அளித்தோம் ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடித்து வருகிறார்.

நல்ல அரசாங்கம் நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள் குறித்த வழக்கில் " கேலிக்குறியது" என்ற வார்த்தையை நீதிமன்றம் கூறி உள்ளது. இது தமிழகத்திற்கு அவமானம் பல கொலை கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது இந்த மதுவால் தான் அண்மையில் பல சம்பவங்கள் மதுவால் தான் நடந்துள்ளன.

பல்லடம் 4 பேர் கொலை முழுக்க முழுக்க மதுவால் தான். இதை கணக்கில் கொண்டாவது முதல்வர் மது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுவால் அரசு வீழ்வதற்கு முன்பாக காக்கும் நடவடிக்கையாக முற்றாக மது விலக்கை அமல் படுத்த வேண்டும்

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிரான போரை தொடுப்பதாக எண்ணுகிறேன். உதய நிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். சனாதனம் வெறும் மனிதர்களுக்கானது அல்ல. மனித குலத்தை தாண்டி எல்லா உயிரினத்திற்கும் பொதுவானதாக உள்ளது சனாதனம் ஒரு இயக்கம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் உயிர்களுக்கிடையே வித்தியாசம் இல்லை என்பதை தான் கூறுகிறது. சனாதனம் பற்றி ஒரு அரிச்சுவடி கூட தெரியாத நிலையில் உதயநிதி பேசுவதாக தான் எண்ணுகிறேன். ஆன்மீகம் அறிவியல் அடிப்படையும் இல்லாமல் பேசுகிறார்கள்.

இந்து மதத்தில் பல மாற்றம் உள்ளது .கிறிஸ்தவத்தில் கூட வெள்ளை கருப்பு என உள்ளது. அதனை பார்க்க முடியுமா சனாதனம் பற்றி புரியாமல் இந்து மதத்திற்கு எதிராக சனாதனத்தை ஒழிப்போம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. அவர்களின் நோக்கம் இந்து மதத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். நேரடியாக ஜாதியை ஒழிக்க நினைத்தால் ஜாதி ஒழிப்பை பற்றி பேசுங்கள்

இந்திய கான்ஸ்டியுயன்சியின் முதல் வரியே இந்தியா, பாரத் வேறில்லை என்பதுதான். ஆங்கிலேயர் உருவாக்கியது தான் இந்தியா. அதனை நீக்கினால் நாம் நமது சொல்லான பாரதத்தை பயன்படுத்துவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு ஒரு நாடு என்றால் ஒரு தேர்தல் தான் இருக்க வேண்டும் இடைத்தேர்தல் பார்முலாக்கள் மூலம் மக்களை தேர்தலை எதிர்பார்க்க செய்வது தேவையற்றது.

இந்தியாவின் அடிப்படை இந்துமதம். ராமாயணத்த்தை, மகாபாரதத்தை இந்தியாவில் இருந்து எடுக்க முடியுமா? பொறுப்புகளை உணராமல் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக உணர்கிறேன்.அந்த வகையில் அ.தி.மு.க. கூற்று வரவேற்கத்தக்கது.

அமைச்சர் என்றால் அதன் பொறுப்பை உணர்ந்து பேசுவது நல்லது. அவரை பேசியது அவருக்கு வலிக்கிறது அதே போல் எவ்வளவு இந்து மக்கள் உள்ளனர். அவர்கள் மனம் புண்படாதா?

இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு இந்து ஒழிக இந்துமதம் ஒழிக என எவ்வாறு கூற முடியும். இவரை கவர்னர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரிப்பது வேதனை அளிக்கிறது. அதில் அதிகம் தி.மு.க.வினரே ஈடுபடுவது அரசு அதிகாரத்தை மக்களுக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது சட்டம் ஒழுங்கு சீரழிந்து முதல்வர் கையில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையில் கட்சிக்காரர்கள். கையில் வைத்து ஆட்டம் போடுகிறார்கள். முன்பு சொத்து அபகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தி.மு.க.வினர் கொலைகளை செய்யும்நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..! | How To Stop Anxiety Instantly In Tamil