உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
பிரதமர் மோடியுடன் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்பு படம்)
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜ தோல்வியை தழுவியதற்கு காரணம் பிரதமர் மோடியா? அல்லது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தா என்பது ஆய்விற்குரியதாக கருதப்படுகிறது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்லில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி சிங்கிள் பார்ட்டி மெஜாரிட் ஆக 240 தொகுதிகளை பெற்று உள்ளது. கடந்த தேர்தலின்போது உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்ற பெற்றியில் சுமார் ௪௦ தொகுதிகளை பாரதிய ஜனதா இழந்ததே இந்த சறுக்கலிற்கு காரணமாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது பா.ஜ.கவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்கவில்லை. இப்போதைய நிலவரப்படி 240 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 296 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
முதல் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.கவுக்கு 282 இடங்கள் கிடைத்தன. இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் அது நடைமுறையில் பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருந்தது. தனிப் பெரும்பான்மைக்கு சுமார் 32 இடங்கள் குறைவதால் இந்த முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பதால், இதுதான் உண்மையான தே.ஜ.கூ. அரசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
காங்கிரசிடம் தற்போது சுமார் 99இடங்கள்தான் உள்ளன. அதை வைத்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம். அப்படியே செய்தாலும் அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாக இருக்கும். நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தவர்கள்.
ஆகவே மக்கள் மோடி தலைமையிலான கூட்டணிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதுபோன்ற சித்துவேலைகளை காங்கிரஸ் கட்சி செய்தால் அது அவர்களுக்கு எதிராக முடியும். ஒரு எச்சரிக்கையுடன், தே.ஜ.கூ. அரசு நீடிக்க வேண்டுமென்றுதான் மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
மேலும் 50 எம்பிக்களை தங்கள் பக்கம் இழுத்து, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இது மிக மோசமான நடவடிக்கையாக இருக்கும். நிதீஷும் சந்திரபாபு நாயுடுவும் அதைச் செய்ய மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. இந்தியா கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. அங்கு போய் சேர்ந்து ஒரு அரசை நடத்திச் செல்வது இயலாது. ஆனால், பா.ஜ.கவுடன் இருந்து பல கட்டுப்பாடுகளுடன் ஒரு அரசை நடத்திச் செல்ல முடியும்.
இந்த முறை உத்தர பிரதேச மாநில வாக்காளர்கள் ஆச்சரியமான முடிவை கொடுத்து இருக்கிறார்கள்.பா.ஜ.கவுக்கு வலுவான தளமாகக் கருதப்படும் இந்த மாநிலம், இந்த முறை சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்களைத் தந்திருக்கிறது.
இது சுவாரஸ்யமான நிகழ்வாகவே கருதப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 'டபுள் எஞ்சின்' அரசை நடத்துவதாகச் சொன்னார்கள். ராமர் கோவிலைக் கட்டினார்கள். குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்துத்துவாவின் சோதனைச் சாலையாக உ. பி கருதப்பட்டது. இப்படி இருந்த மாநிலத்தில் எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்பதை என்னால் இந்தத் தருணத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதைப் புரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் அனைத்து இடங்களையும் பெற்றுவிட்டார்கள், சத்தீஸ்கரில் பெரும்பான்மை இடங்களை வென்றார்கள். உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் பெரும்பான்மை இடங்களை வென்று விட்டார்கள். இந்துத்துவ சோதனைச் சாலையின் மையமாக இருக்கக்கூடிய மாநிலம் உத்தர பிரதேசம். அங்கே பாதிக்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. இழப்பது ஏன் எனப் புரியவில்லை. அங்கே இத்தனை இடங்களை இழந்ததால்தான் பாரதிய ஜனதா கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இது ஒரு கவனிக்கத்தக்க நிகழ்வு.
இன்னொரு விஷயம். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடிக்கு போட்டியாகப் பார்க்கப்படுபவர். மோடி முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் ஆகியிருந்தால் யோகியை உத்தர பிரதேச அரசியலில் இருந்து அகற்றி டெல்லிக்கு கொண்டு வந்திருப்பார். அவர் எப்படி குஜராத் மாநிலத்தில் 12 - 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, பிரதமர் ஆனாரோ அதுபோல யோகி ஆகாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.
எனவே இப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி மோடியின் தோல்வியா அல்லது யோகியின் தோல்வியா என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிறுபான்மையினருக்கு கூடுதலாக சலுகைகளை வழங்குவதாகப் பலர் கருதினார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்ததால் பல இடங்களில் பெண்கள் கணக்குகளைத் துவங்குவதற்காக அஞ்சலக வாசலில் காத்திருந்தார்கள்.
இந்தப் போக்கிற்கு எதிராக வாக்குகள் விழுந்திருக்கலாம். ஆகவே, சித்தராமைய்யா அரசு மீதான அதிருப்தியும் ஏற்கெனவே அங்குள்ள இந்துத்துவா வாக்குகளும் சேர்ந்துதான் இந்த முடிவைத் தந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் நிலையில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கவே செய்யும்; அப்படி இருக்கும்போதும் இவ்வளவு பெரிய வெற்றியை திமுக கூட்டணியால் எப்படி பெற முடிந்தது? என எழுகிற கேள்வி முக்கியமானதாகும்.
இதற்கு பதில் தமிழகத்தில் இன்னும் மோடிக்கு எதிரான அலை இருப்பதாக தான் கருதப்படுகிறது.ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் நான்காகப் பிரிந்துவிட்டன. திமுக ஒரு வலுவான கூட்டணியை அமைத்து 49 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது.
ஆனால், எதிர்தரப்பில் பா.ஜ.க. தனியாக நின்றது. அ.தி.மு.க. தனியாக நின்றது. நாம் தமிழர் கட்சி தனியாக நின்றது. இதனால் வாக்குகள் பிளவுபட்டன. வாக்குகள் இப்படி நான்காகப் பிரியும்போது தி.மு.க. பெரும் வெற்றியைப் பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்தத் தேர்தல் முடிவை வைத்து தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு இல்லை என்று புரிந்துகொள்வது தவறு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu