திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

திருச்சி வடக்கு மாவட்ட  அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி பேசினார்.

பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 26.2.2024, திங்கட்கிழமை, காலை 10மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28 வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதை கண்டித்தும், தமிழகத்தில் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கர்நாடகம் 2023 -24 ஆம் ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய பங்கு நீரை பெற்று தராத விடியா திமுக அரசை கண்டித்தும், அதிமுக சார்பில் வருகின்ற 29 -2-2024 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் திலகர் திடலில் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைப்படி கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.மனோகரன், கழக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சின்னசாமி மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!