தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய் (கோப்பு படம்).
தமிழில் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் பெயரை இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து உள்ளார். நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு இருந்ததால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடிகர் விஜயோ 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் புதிய கட்சி போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர் மேலும் கட்சி நிர்வாகிகளை விஜய் நியமித்து கட்சி பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் 50 வது பிறந்தநாளை நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். அதே நாளில் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் கட்சி பதிவுக்கான விண்ணப்பத்தை தேர்தல் கமிஷனிடம் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஏற்கனவே வழங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து கட்சியின் பதிவு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த விவரங்களை பத்திரிகையில் பொது அறிவிப்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் ஜோசப் விஜய். பொதுச் செயலாளர் ஆனந்த். பொருளாளர் வெங்கட்ராமன். தலைமை கழக செயலாளர் ராஜசேகர். இணைக் கொள்கை பிரபு செயலாளர் தகிரா என பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை பதிவு செய்ய யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu