குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை-மக்கள் நீதி மய்யம் அறிக்கை.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை-மக்கள் நீதி மய்யம் அறிக்கை.
X
அதிகரிக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் எந்த ஒரு பேரிடரின் போதும் அதற்கு பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர் கொள்பவர்கள் இளம் சிறார்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் மிக எளிதில் கல்வி இடைநிற்றல் பாலியல் வன்கொடுமைகள் குழந்தைத் திருமணங்கள் போன்ற சுரண்டலுக்கு ஆளாகி விடுகிறார்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கியபோதே கொரோனா தொற்றால் அடுத்த பத்தாண்டுகளில் 1.30 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெறும் என யூனிசெப் எச்சரித்தது.

கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக பார்வை தன்னார்வ தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன மிக ரகசியமாக நிகழ்வதால் இந்த கசப்பான உண்மை வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது.

புள்ளிவிவரங்களின் படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் சேலத்தில் 98 தர்மபுரியில் 192 என தமிழகத்தில் சுமார் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகம் அறியாமை மூடநம்பிக்கை சாதிப் பற்று வறுமை ஊரடங்கு காலத்தில் திருமணச் செலவுகள் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன.

உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றார்கள். தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சமூக நலத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையும் உறுதி செய்வோம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளார்

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!