/* */

திமுகவுக்கு தேன் நிலவு காலம்; 3 மாதத்துக்கு விமர்சிக்க கூடாது- குஷ்பு

திமுக இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே புதுமண தம்பதியின் தேன் நிலவுபோல். இப்போதைக்கு விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.கவை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார்.

HIGHLIGHTS

திமுகவுக்கு தேன் நிலவு காலம்; 3 மாதத்துக்கு விமர்சிக்க கூடாது- குஷ்பு
X

பாஜக பிரமுகர் குஷ்பு.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு தளர்வில் எடப்பாடி பழனிசாமி, மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறக்க முடியுமா?

இப்போதுன் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை முதல் 3 மாதம் வரை தேனிலவு காலமாக நினைத்து எதுவும் சொல்லமாட்டோம்.

கட்சிகளுக்கும். ஆட்சிக்கு வந்ததும் தேனிலவு காலம் போலத்தான். எனவே இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது.

கொரோனா தடுப்பூசியால் உத்தரவாதம் இல்லை. போடக்கூடாது என்று கூறி எதிர்த்தார்கள். இப்போது அதே தடுப்பூசி தான் கொரோனாவை செல்லும் பேராயுதம் என்றும் சொல்கிறார்கள்.

கோவில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று ஏதோ புதிய திட்டம்போல் பேசுகிறார்கள். ஏற்கனவே பல கோவில்களில் பெண்கள் தான் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.

நான் முதலில் குறிப்பிட்டதுபோல், இது தேனிலவு காலம். அப்படி, இப்படித்தான் இருப்பார்கள். குறைந்தது 3 மாதம் ஆகட்டும். அதன் பிறகுதான் இவர்களின் செல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் இருக்கும் என்றார்.

Updated On: 15 Jun 2021 9:20 AM GMT

Related News