ஆளுநருக்கு எதிர்ப்பு திமுகவின் தோல்வி மறைப்பு கேடயம்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..

ஆளுநருக்கு எதிர்ப்பு திமுகவின் தோல்வி மறைப்பு கேடயம்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..
X

கோவில்பட்டியில் பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் ஆளுநருக்கு எதிர்ப்பு ஆகியவை திமுக அரசு தனது தோல்வியை மறைக்க எடுத்துள்ள கேடயம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர், தென்காசியைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் மன்சூர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலுக்கு முன் திமுக மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் அதனை செயல்படுத்தமால் தற்போது மின்கட்டணத்தினை பன்டமங்கு உயர்த்தியுள்ளது. மின் கட்டணத்தினை உயர்த்த மத்திய அரசு அழுத்தம் தான் காரணம் என்று கூறும் தமிழக அரசு நீட் தேர்வினை எதிர்கிறார்கள்.

மத்திய அரசு என்ன அழுத்தம் கொடுத்தலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா?. சொத்தையான காரணத்தினை தமிழக அரசு கூறக்கூடாது. மத்திய அரசு உயர்த்த சொல்லவில்லை, மாற்றங்களை தான் செய்ய கூறியுள்ளது. ஜிஎஸ்டி வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது பால் விலை உயர்வுக்கு அதனை காரணம் காட்டுவது எப்படி?. அங்கேயும் ஊழல் தான்.

ஆவின் நிறுவனத்தில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலையை உயர்த்துகின்றனர். பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும். இதுதொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினையிலும் திமுக அரசு சரியாக செயல்படவில்லை.

ஒன்று கடந்த ஆட்சி மீது அல்லது மத்திய அரசு மீது பழியை சுமத்துகின்றனர். திமுக அரசு நாளுக்கு நாள் தோற்று கொண்டு இருக்கிறது. எதிலும் எந்த கட்டுபாடு இல்லை. திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவால் ஆட்சியை சரிவர நடத்தமுடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஏதாவது சாக்குபோக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தி எதிர்ப்பு பேசுகின்றனர். இந்தி எங்கு வருகிறது, எங்கு திணக்கப்படுகிறது என்று தெரியவில்லை. திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்குகிறன்றனர். இந்தி திணிப்பு மற்றும் ஆளுநருக்கு எதிர்ப்பு என திமுக கூறுவது தங்களது தோல்வியை மறைக்க எடுத்திருக்ககூடிய கேடயம் ஆகும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil