ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கவேண்டும்: தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்

ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கவேண்டும்: தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்

திமுக இளைஞர் அணி மாநாட்டு மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் உள்ளனர்.

ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கவேண்டும் என தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பது உள்பட 25 தீர்மானங்கள் தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று காலை துவங்கியது. இந்த மாநாட்டிற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினா. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. க .ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மாநாட்டு திடலில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை திறந்து வைத்தார். இந்த மாநாட்டில் தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜோயல் வரவேற்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியை பாராட்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.

Tags

Next Story