ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
X

ஆளுநர் ரவி.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று கோவையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பல்கலைக்கழக இணைவேந்தரான, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இதில் பங்கேற்றார்.

பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடி பேசும்போது, இந்தி திணிப்பு முயற்சி குறித்து குறிப்பிட்டார். இதற்கு விழா மேடையிலேயே ஆளுநர் ரவி பதில் கொடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து, இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை பல்கலைக்கழக விழா, வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆளுநர் ரவி, வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இச்சூழலில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!