மாண்பை கடைப்பிடிக்கும் வகையில்தான் ஆளுநர் வெளியேறினார்.

மாண்பை கடைப்பிடிக்கும் வகையில்தான் ஆளுநர் வெளியேறினார்.
X
சட்டப்பேரவையின் மாண்பை கடைப்பிடிக்கும் வகையில்தான் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் ஆளுநர். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இருப்பினும் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அளித்த ஆளுநர் உரைக்கும், இன்றைய உரைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது; ஆளுநர் உரையில் அரசின் சாதனைகள் இருக்கலாம், அரசியல் இருக்கக் கூடாது; சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சருக்கும், சபாநாயகருக்கும் ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். தமிழாக்கத்தை சபாநாயகர் முடித்த உடன் தேசிய கீதத்திற்காக ஆளுநர் எழுந்து நின்றார்; சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை வசைபாடத் தொடங்கினார்; அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில்தான் ஆளுநர் வெளியேறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்