முன்னாள் அமைச்சர்கள் ரமணா, விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி. ரமணா.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பி. வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு தொடர்வதற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அனுமதி வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பி வி ரமணா. இதனை தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் சி விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனைக்கு தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் குட்கா தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் இந்த வழக்கு உள்ளது.
பி.வி ரமணாவும், விஜயபாஸ்கரன் முன்னாள் அமைச்சர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்பதால் இது தொடர்பான மசோதாவை தமிழக அரசு ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்தது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.
இது மட்டும் இன்றி மேலும் பல மசோதாக்களையும் அவர் கிடப்பில் போட்டு இருந்ததால் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நேரத்தில் இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிந்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பி. வி.ரமணா மற்றும் விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு ஆளுநர் அனுமதி அளித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu