பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி சிறப்பு திட்டம்- கமல்ஹாசன்

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி சிறப்பு திட்டம்- கமல்ஹாசன்
X
பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்பு திட்டம் வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்பு திட்டம் கமலஹாசன் வேண்டுகோள்

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்பு திட்டம் வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்துள்ளது என்பது தான் மக்கள் நீதி மையத்தின் நிலைப்பாடு. கிராமசபை கூட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மையம். உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் பாதையை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதும் மக்கள் நீதி மையத்தின் முதன்மையான அரசியல் செயல்பாடுகளில் ஒன்று உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படுவதற்கு இருக்கும் பல தடவைகளில் முக்கியமான ஒன்று நிதியாதாரம் இல்லாமையே விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு குறித்து சிந்திப்பது அவசியம் ஆகிறது.

பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கீடு என்பது தான் பட்ஜெட்டில் வழக்கமான அறிவிப்பாக இருக்கும். ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை கைக்கு வரும் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளாட்சித் தலைவர்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வது கவனிக்கப்பட வேண்டியது.

இன்னும் சொல்லப்போனால் பல கிராம ஊராட்சிகளில் நிதி இல்லாததால் பணிகள் பாதியில் நிற்பதைக் காணலாம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என்பதுதான் ஊராட்சித் தலைவர்கள் இருந்து கிடைக்கும் பதிலாக இருக்கும்.

உள்ளாட்சி அமைப்பானது உள்ளூர் தேவைகளை திட்டமிடுதலும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் உரிய நேரத்தில் நீதி ஆகியவை அவசியமாகிறது. மாநில சுயாட்சி என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் திமுக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவான சிறப்பு திட்டத்தை முன்னெடுப்பது சிறந்தது.

1992 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 73, மற்றும் 74 வது அரசியல் சாசன திருத்தம் மூலம் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைத்தது. அது வெறும் காகிதங்களில் தங்கி விடாமல் இருப்பதற்கு அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வு நிதிப் பகிர்வு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி சுயாட்சி அரசு என்ற உன்னத நிலையை உள்ளாட்சி அமைப்புகள் எய்தும்.

தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து பெரும் நிதி மாநிலத் திட்டக்குழு நீதி ஆகியவற்றை உள் சுயாட்சி அரசிற்கு தாமதமில்லாமல் குறித்த காலத்தில் அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு முறையாக இல்லாததால் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வருடத்திற்கு நான்கு முறை நடக்கும் சம்பிரதாயச் சடங்குகள் முடிந்து போகின்றன. கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன.

மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது கிராம ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி போன்ற முழு சுயாட்சி அரசுகளுக்கு எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற தெளிவான விவரம் அறிக்கையில் இடம்பெற வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வழக்கத்தை தமிழக அரசு பின்பற்றலாம்.

கேரள அரசின் பட்ஜெட்டில் இணைப்பு அறிக்கை 4 என்பது ஒரு சுயாட்சி அரசுகளுக்கான நிதிப் பகிர்வை தெளிவாக குறிப்பிட்டு இருக்கும். மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதியை ஆதாரமாகக் கொண்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு தேவையான காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் குடிநீர் சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கி விடும். இந்தக் காலத்தில் உரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊராட்சிகளுக்கு உத்தரவு வழங்கிய அரசு அதற்கான நிதியை உரிய காலத்தில் கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதை பிரதானப்படுத்தும் தமிழ்நாடு அரசு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். கேரள முதலமைச்சர் நிவாரண நிதி இணைய தளம் சிறப்பாக இருக்கின்றது என்று அந்த நடைமுறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுபோல பட்ஜெட்டின் போது முழு சுயாட்சி அரசுகளுக்கான நிதிப் பகிர்வு குறித்த தெளிவான விவரங்களை தனித்தனியாக ஓர் இணைப்பு அறிக்கையாக வெளியிட வேண்டும்.

மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா மா பொ சிவஞானம் கலைஞர் மு கருணாநிதி போன்றவர்கள் மாநில சுயாட்சியை பாதைகளை முன்னெடுத்தவர்கள் அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீடுகளை சிறப்பு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.






Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!