/* */

திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்பி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம்
X

திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் பாரிவேந்தர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார்.கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், பொருளாளர் ஜி.ராஜன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல்சூழ்நிலைகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொருள்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால தேவையை உணர்ந்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு உதவிட வேண்டும். வடகிழக்கு பருவமழையின் மிக அதிதீவிர மழை பொழிவினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, பாரிவேந்தரும், ரவி பச்சமுத்துவும், தங்கள் சொந்த செலவில் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கியதற்காக பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.

பாரிவேந்தர் எம்.பி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது. மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 29 Dec 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?