அதிமுக முன்னாள் அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைஞ்சிட்டார்

அதிமுக முன்னாள் அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைஞ்சிட்டார்
X
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தோப்பு வெங்கடாசலம் இன்று காலை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைஞ்சிட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாசலத்துக்கு கடந்த தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கவில்லை. எனினும் அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இதனிடையே மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.


இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் தோப்பு வெங்கடாசலம் இன்று காலை திமுக தலைவரும் தமிழக முதலமைச்ருமான முக ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா