வெளியானது அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல்
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று புதன்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் பட்டியல்
- சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
- சென்னை தெற்கு - ஜெயவர்தன்
- காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
- அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
- கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
- ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
- சேலம் - விக்னேஷ்
- தேனி - நாராயணசாமி
- விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
- நாமக்கல் - எஸ்.தனிமொழி
- ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
- கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
- சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
- நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
- மதுரை: பி.சரவணன்
- ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu