குடும்பத் தலைவிகள் உரிமை தொகை உடனே வழங்க வேண்டும்-கமல்ஹாசன் கோரிக்கை
குடும்பத் தலைவிகள் கான உரிமை தொகையை உடனே வழங்க வேண்டும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத்திற்கான உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கமலஹாசன் விடுத்துள்ள அறிக்கையில்... நமது பொருளில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது அவர்களின் தியாகமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அளவிடுவது அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மையம் ஆகும்.
குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக கணவனைச் சார்ந்து இருக்கும் சூழ்நிலையை தற்போது நிலவி வருகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம் கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலையில் தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கின்றார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மையத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.
வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குடும்பத்தலைவியின் உழைப்பின் மதிப்பு கணவனின் அலுவலக வேலை மதிப்பை விட குறைந்தது இல்லை என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என மக்கள் நீதி மையத்தின் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டனர். தமிழகத்தில் தொடங்கி அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் வரை இது எதிரொலித்தது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்தை ஒப்பிடும் போது இது மிக குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே கிடைக்காத நிலையில் இந்த சிறிய தொகையை அவர்களுக்கு கிடைக்கின்றதே என்று தான் கருத வேண்டியுள்ளது. இது ஒரு சிறு தொடக்கம் என்கிற அளவில் மனதை தேற்றிக் கொள்ளலாம்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம் பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூக நலத்திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை விஷயத்தில் இரக்கம் காட்டுவது ஏற்புடையது அல்ல.
திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu