தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்
X
பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்

பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தி ஊடகங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று செய்தி வெளியிட்ட நிலையில், இந்த தகவல் வேகமாக ஆசிரியர் மற்றும் பொது வாட்ஸப் குழுக்களிலும் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் பள்ளி தேர்வு ரத்து குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேட்டபோது, அவர் ஏற்கனவே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர்களுக்கு நிச்சயம் தேர்வு நடைபெற்றும். வதந்தி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு உண்டு- பள்ளி கல்வி துறை அமைச்சர்

Next Story
why is ai important to the future