துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
கோப்பு படம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், ஆளுநர் உரை தொடங்கும் முன்பாகவே, அதிமுக உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது, அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்து, வெளி நடப்பு செய்ததாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவையில் இருந்து வெளியேறியதும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது. சட்டம் – ஒழுங்கு தமிழகத்தில் முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை என்றார்
தமிழக மக்களுக்கு திமுக அரசு பொங்கல் பரிசை வழங்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்றவற்றின் பயன்பாடும், கடத்தலும் அதிகரித்துவிட்டது. கல்விநிலையங்கள் அருகிலேயே, போதைப் பொருட்களின் புழக்கம் இருக்கிறது என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu