பொதுச்செயலாளர் பதவி: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட எடப்பாடி
Edappadi Palaniswami -அதிமுகவில் பல பெருந்தலைகள் இருந்தாலும் ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஆனால் ஜெ மறைவுக்கு பின்னர், சசிகலா தானே முதல்வராவதாக முடிவெடுத்தார்.
அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால், முதல்வர் பொறுப்பை செங்கோட்டையனிடம் வழங்கலாம் என்று முடிவு செய்து சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதாவது, எம்.எல்.ஏக்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் அள்ளி இறைக்க வைட்டமின் 'ப' கேட்டதாக கூறுகின்றனர்.
இந்த நிபந்தனைகளுக்கு செங்கோட்டையன் ஒத்து வராத நிலையில், சசிகலாவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் தயார் என்று முன்வந்த எடப்பாடியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.
அரியணை ஏறியதும் உடனடியாக சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினார் எடப்பாடி. பின்னர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டி விட்டு, அதிமுக பொதுச்செயலாளராக வர வேண்டும் என்பதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கினார்.அதன்படியே மெல்ல மெல்ல ஓபிஎஸ் பக்கம் இருந்த ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, ஓபிஎஸ்-ஐ ஓரம் கட்டி, பொதுக்குழுவைக் கூட்டி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்றும் அறிவித்துக் கொண்டார்.
இதற்கு பிறகு தான் எடப்பாடி, தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட கதை வருகிறது.
இடைக்கால பொதுச் செயலாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டதும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர், பொருளாளர் என்று அனைத்து பொறுப்புகளும் மாற்றப்பட்டன. தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு பெற்றதால் முன்னர் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளை தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அதிமுகவின் பதிவு ஆவணங்களில் இருந்து நீக்குமாறு எடப்பாடி ஆணையத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் பதவிகளில் இருந்து எடப்பாடி தாமாக முன்வந்து விலகி விட்டதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இது ராஜினாமாவுக்கு ஒப்பானது என்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்று கூறியதோடு, அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி பார்த்தால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓ.பிஎஸ்; இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி.
ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருந்து தாமாகவே நீக்கம் செய்து கொண்டது தான் தற்போது எடப்பாடிக்கு சிக்கலை தந்துள்ளது. இதனால் எடப்பாடி படு அப்செட்.
தனது தீவிர ஆதரவாளர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பிரமாண பத்திரத்தை திரும்ப பெற முயற்சித்து வருகிறாராம்.
இதனைக் கேள்விப்பட்ட ஓபிஎஸ் தரப்பு படு குஷியில் உள்ளதாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu