ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டது

ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டது
X
ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக சந்தித்தாகவும், நலமுடன் இருந்ததாக மருத்துவர் நரசிம்மன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக சந்தித்தாகவும், நலமுடன் இருந்ததாகவும் மருத்துவர் நரசிம்மன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டது என அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தனர். மேலும் ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக சந்தித்தாகவும், நலமுடன் இருந்ததாகவும் மருத்துவர் நரசிம்மன் கூறினார்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2019ம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டது. அந்தவகையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது , ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்கு மூலம் அளித்தார். அதனை தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன், டிசம்பர் 1, 2016 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக ஜெயலலிதாவை சந்தித்தாகவும், நலமுடன் தான் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!