கருணாநிதி அருங்காட்சியகத்தை இலவசமாக எப்போது முதல் பார்க்கலாம் என தெரியுமா?

கருணாநிதி டிஜிட்டல் உலகம் அரங்கில் ஒரு காட்சி.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அரங்கத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மாதம் 24ந்தேதி திறந்து வைத்தார்.
இந்த நினைவரங்கமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் பற்றிய டிஜிட்டல் காட்சிகள். ஹாடோக்ராம் தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி பேசும் காட்சிகள்.கருணாநிதியின் படைப்புகள், பேச்சுகள், எழுத்துகள் பற்றிய தகவல்கள் இதில் இடம் பெற்று உள்ளது.
இவ்வளாகத்தில் கருணாநிதி சிலை 28 அடி உயரத்தில், 8 டன் எடையுள்ள வெண்கல சிலை. கருணாநிதி பேசும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும்.
பசுமையான வளாகம்: மரங்கள், செடிகள், பூங்காக்கள் நிறைந்த வளாகம். நினைவிடத்திற்கு வரும் பொதுமக்கள் ஓய்வெடுக்க ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திட்டசெலவு 180 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் உள்ள கலைஞர் உலகம் எண்ணும் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இணைய தளத்தில் முன்பதிவு செய்து பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்றும் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கருணாநிதி நினைவிடம் அருகே 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.
முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது.
இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நினைவிடம் அருகே 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஒருவாரத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கபட உள்ளது. அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் கிடையாது. திரை உலக பிரபலங்கள் பலரும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் மார்ச் 6 முதல் கருணாநிதி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மார்ச் 6 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் இலவசமாக பார்வையிடலாம். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu