அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள 5 தொகுதிகள் பற்றி தெரியுமா?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 40 இடங்களில் அதிமுக ஐந்து இடங்களை கைப்பற்றும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லை. சில இடங்களில் அந்த கட்சி 3ம் இடத்திற்கும் செல்லும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அப்போது அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது, என்றார்.
அதன்படி இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனியாக கூட்டணி அமைத்தும், பாஜக தனியாக கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கின்றன. களத்தில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் நடக்கிறது. பல்வேறு மேடைகளில் முன்னாள் முதல்வர் அதிமுகவின் மறைந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசினாலும் கூட, அதிமுக - பாஜக என்னவோ தேர்தல் களத்தில் மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. அதிமுக பாஜக கூட்டணி இல்லாமல் சந்திக்கும் இந்த லோக்சபா தேர்தல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 40 இடங்களில் முக்கியமான 4 இடங்களை கைப்பற்ற அதிமுக தீவிரமாக முயன்று வருகிறதாம்.
இரட்டை இலை போட்டியிடும் 34 இடங்களில் அதிமுக 2 இடங்களில் நிச்சயம் 3வது இடத்திற்கு செல்லும் என்று கள நிலவரம் தெரிவிக்கின்றதாம். கன்னியாகுமரி தேனி இன்னும் 5 இடங்களில் அவர்கள் 3வது இடத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் கொஞ்சம் உள்ளன வேலூர் தருமபுரி கோயம்புத்தூர் ராமநாதபுரம் திருநெல்வேலி மீதமுள்ள 27 இடங்களில் அதிமுக நிச்சயம் முதல் 2 இடங்களைப் பிடிக்கும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள 5 'இடங்களிலும் தேனியிலும் அதிமுக 2வது இடத்தைப் பெறுவதை உறுதிசெய்ய தற்போது எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக உழைத்து வருகிறாராம், இந்த 6 இடங்களில் அதிமுக 2வது இடத்தைப் பிடித்தால், அதிமுக 25% வாக்குகளை பெறும். பாஜக வாக்குசதவிகிதம் 12%க்கும் குறைவாகப் பெறும்.
இது போக அதிமுகவுக்கு 5 இடங்களில் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் உள்ளது 1. பொள்ளாச்சி 2. திருப்பூர் 3. ஈரோடு 4. கள்ளக்குறிச்சி 5. விழுப்புரம் இது போக திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாம். இந்த 4 தொகுதிகளில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதில் அதிமுக மிக தீவிரமாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu