/* */

பத்திர பதிவுத்துறை அலுவலங்களில் உயர்ந்த மேடையில் அமரக்கூடாது-அமைச்சர் உத்தரவு

பத்திர பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல், சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளளார்.

HIGHLIGHTS

பத்திர பதிவுத்துறை அலுவலங்களில் உயர்ந்த மேடையில் அமரக்கூடாது-அமைச்சர் உத்தரவு
X

கோப்புப் படம் 

பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளளார். என அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சமீபகாலமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் திடீர் என ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். பதிவுத் துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் உடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சென்ற வாரம் ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவு செய்து வருவதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவைகளை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

எனவே இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணிகளைச் செய்ய வேண்டும் என தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கடுமையாகப் கணினிமயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணையம் வழியாகவே செலுத்தப்படுவதால் சார்பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் இந்த உயர் மேடைகள் தற்போது தேவையில்லை என்பதால் பதிவு அலுவலர்களின் இருக்கையில் சமதளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என தமிழக அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தேவையை உறுதி செய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையைச் சுற்றி உள்ள தடுப்பணை உடனடியாக தங்கள் இருக்கையை சமதளத்தில் அமைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?