ஸ்டாலினுக்கு ஒட்டகம்: பிறந்த நாள் பரிசாக வழங்கினார் தி.மு.க. தொண்டர்

ஸ்டாலினுக்கு ஒட்டகம்: பிறந்த நாள் பரிசாக வழங்கினார் தி.மு.க. தொண்டர்
X

MKStalin birth day, DMK Volunteer presents camel newsமுதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஒட்டகத்துடன் தி.மு.க.  தொண்டர் ஜாகிர்ஷா.

MKStalin birth day, DMK Volunteer presents camel newsமுதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாக ஒட்டகம் ஒன்றை வழங்கி உள்ளார் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. தொண்டர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் ஒட்டகத்தை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார்.

MKStalin birth day, DMK Volunteer presents camel newsதி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்,நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரை உலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.

MKStalin birth day, DMK Volunteer presents camel newsமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது முதல்-அமைச்சருக்கு பரிசளிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்ஷா என்ற தி.மு.க. தொண்டர் ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார்.


MKStalin birth day, DMK Volunteer presents camel newsஅந்த ஒட்டகம் 2 வயது ஆண் ஒட்டமாகும். அதன் உடல் பகுதியில் கருப்பு சிவப்பு நிற தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அந்த ஒட்டகத்தை வளர்ப்பதற்கான கால்நடை மருத்துவர் அளித்த சான்றிதழ் ஆகியவற்றையும் அவர் அப்போது செய்தியாளர்களிடம் அவர் காட்டினார்.

MKStalin birth day, DMK Volunteer presents camel newsஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘ஒட்டகம் ஆடு, மாடுகளை போல் வீட்டில் வளர்ப்பதற்கான ஒரு பிராணி தான். அதற்காக தான் மருத்துவர் சான்றிதழுதுடன் வந்திருக்கிறேன். நாள் தளபதியின் தீவிர தொண்டன். தமிழர் நலனிற்காக அவர் பாடுபட்டு வருகிறார். இதற்கு முன் அவருக்கு ராஜகுதிரை, ஜல்லிக்கட்டு காளை, வரையாடு, வாஸ்து மீன், புறா ஆகிய உயிருள்ள விலங்குகள் மற்றும் பறவை மற்றும் மீன் வழங்கி உள்ளேன். அந்த வரிசையில் இப்போது உலகில் யாரும் வழங்கிடாத ஒட்டகத்தை தளபதி அவர்களுக்கு வழங்குவதற்காக வந்திருக்கிறேன்.


MKStalin birth day, DMK Volunteer presents camel newsநான் ஏற்கனவே வழங்கிய அனைத்து உயிர் விலங்குகளையும் தளபதி தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அதைப்போல் இந்த ஒட்டகத்தையும் நிச்சயம் வளர்ப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சிலர் இதன் மதிப்பு எவ்வளவு என கேட்டார்கள். பரிசாக கொடுக்கும் பொருட்களுக்கு மதிப்பு கிடையாது. இதனை கொடுமுடியில் இருந்து வாங்கி நான் வாகனம் மூலம் இங்கு கொண்டு வந்தேன்’ என்றார்.

MKStalin birth day, DMK Volunteer presents camel newsமுதல்வர் ஸ்டாலினுக்கு ஒட்டகம் பரிசாக அளிக்கப்பட்டு இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். முதல்வர் வீட்டில் இனி ஒட்டகப்பால் கிடைக்கும்.... ஒட்டகத்திற்கு கடலில் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்காமல் இருந்தார் சரி... ஒட்டகம் போல் ஆர்வ கோளாறால் இனி எவனாவது பாம்பு கொடுக்காமல் இருந்தால் சரி... என்றெல்லாம் கலாய்ப்பு நீண்டு கொண்டே செல்கிறது.

Tags

Next Story