மே 28ல் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

மே 28ல் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
X
திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம், வரும் 28 ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் எறு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம், வரும் 28.05.2022 சனிக்கிழமை, காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!