அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும் முதல்வருமான முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா சிலையை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூ பொதுச்செயலாளர் சீத்தராம் எச்சூரி,இந்திய கம்யூ பொதுச்செயலாளர் டி.ராஜா,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக மூத்த தலைவர்கள் அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். மேலும், அகிலேஷ் யாதவ், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, டி.ராஜா, திருமாவளவன், அமர் பட்நாயக் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். Karunanidhi-A life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். அதேபோல், A Dravidian Journey புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்நிலையில், டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டே திமுகவுக்கு இடத்தை மத்திய அரசு ஒதுக்கிவிட்ட போதிலும், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் முடிந்துள்ளன.
மூன்று தளங்கள் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காக பெரிய அரங்கம் உள்ளது. முதல் தளத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசும் இடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. முதல் தளத்திலும், 2-ம் தளத்திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்குவதற்காக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் நூலகம், செய்தியாளர்களுக்கென தனி அறை உள்ளிட்ட வசதிகளுடன் பிரமாண்டமாக எழில்நயத்துடன் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் செல்போன் காணாமல் போய் விட்டது. HandBag ல் வைத்திருந்த ஐபோன் திருடப்பட்டுள்ளது. அதிலும் டெல்லி அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது சம்பவம் நடந்துருக்குது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu