திமுக கவுன்சிலரின் கணவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

திமுக கவுன்சிலரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்-கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திமுக நிர்வாகி ஜெகதீசன் தற்காலிகமாக நீக்கம்
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் கவுன்சிலரின் கணவர் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் 51வது வார்டு அதிமுக கவுன்சிலர் நிரஞ்சனா கணவர் ஜெகதீசன் திமுகவில் கட்சி பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராயபுரம் ஜேபி கோவில் தெருவில் தனது ஆதரவாளர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியே வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தியாகராஜன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இரவு நேரத்தில் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர். அப்போது போலீசாரை தகாத வார்த்தைகளால் ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திட்டினர். நான்தான் கவுன்சிலர் என்று ஜெகதீசன் போலீசாருடன் விவாதம் செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வார்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu