குறவர், குருவிக்காரர் சமூகங்களை வகைப்படுத்த வேண்டும்-விஜயகாந்த்

குறவர் சமுதாயத்தை குருவிக்காரர்கள் அடையாளப்படுத்துவது அவர்களுக்கான நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது இரு வேறு சமூகத்தை வகைப்படுத்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறியச் செய்வதுடன் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவளிகள் ஆக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்
மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல, பழந்தமிழ் வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்தவர் சமுதாயத்தின் தலைமுறைகள் அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
குருவிக்காரர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்பதாகவும் அதேசமயம் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவது காரணமாக அவர் சமுதாயத்தினர் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே குறவர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டு குருவிக்காரர் சமூகத்தையும் மதத்தையும் வேறுபடுத்தி உலகறியச் செய்வதுடன் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu