நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேமுதிக தனித்துப்போட்டி என அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேமுதிக தனித்துப்போட்டி என அறிவிப்பு
X
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1-ம் தேதி முதல், 7-ம்தேதி வரை, அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகியாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture